பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை

Cancer COVID-19 Vaccine Royal Family
By Arbin Sep 07, 2025 12:25 AM GMT
Report

சார்லஸ் மன்னர் மற்றும் வேல்ஸ் இளவரசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணம் கோவிட் தடுப்பூசி என அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் ஆலோசகர் ஒருவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான ஆய்வுகள்

ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் ஆலோசகரான இதய நோய் நிபுணர் டாக்டர் அசீம் மல்ஹோத்ரா என்பவரே பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை | Covid Vaccine Cancer Royal Family

தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்தைக் கொண்ட டாக்டர் மல்ஹோத்ரா, இதுவரை நூற்றுக்கணக்கான ஆய்வுகள் கோவிட் தடுப்பூசியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

கோவிட் தடுப்பூசி புற்றுநோய்க்கான ஆபத்து காரணியாக இருக்கலாம் என தெரிவித்துள்ள டாக்டர் மல்ஹோத்ரா, பல மருத்துவர்களும் இதையே உணர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம்... கொத்தாக 150 பேர்கள் கைது

லண்டனில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம்... கொத்தாக 150 பேர்கள் கைது

மட்டுமின்றி, பிரித்தானிய பேராசிரியர் ஆங்கஸ் டால்கிலீஷ் என்பவரின் கருத்தை குறிப்பிட்டு, பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களின் புற்றுநோய்க்கு கோவிட் தடுப்பூசிகளே முதன்மையான காரணிகளாக இருக்க வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரி முதல் மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வருகிறார், அதே நேரத்தில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சிகிச்சை முடித்து பொது வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை | Covid Vaccine Cancer Royal Family

ஏற்கனவே கோவிட் தடுப்பூசிக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு கல்வியாளர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அரசாங்க அமைப்புகளான CDC, FDA, NCI உள்ளிட்டவை அந்த கூற்றுகளை மறுத்துள்ளதுடன், கோவிட் தடுப்பூசி புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அறிவித்துள்ளது.

தீங்கு விளைவிக்கும்

இந்த நிலையில் பிரித்தானியாவில் ஒரு அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் மல்ஹோத்ரா, கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உண்மையான வைரஸை விட தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு அதிகம் என்றார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை | Covid Vaccine Cancer Royal Family

மட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாகவே உலக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை | Covid Vaccine Cancer Royal Family

இதனிடையே, இன்னும் சில மாதங்களுக்குள் அமெரிக்க சந்தையில் இருந்து மொத்த கோவிட் தடுப்பூசிகளையும் நீக்க வேண்டும் என்று டாக்டர் மல்ஹோத்ரா ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடந்த மாதம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு கென்னடி ஜூனியரும் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US