குறையும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் செயல்திறன்: ஆய்வில் தகவல்
ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 2 டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குபின் குறைகிறது என்று லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து மற்றும் பிரேசிலில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கொரோனா தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் அவசியம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திய 20 லட்சம் மக்கள், பிரேசிலில் 4.20 கோடி மக்கள் ஆகியோரின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஸ்கொட்லாந்தில், 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்குப்பின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு 5 மடங்கு அதிகரித்திருக்கிறது,
சில நேரங்களில் 2 தடுப்பூசி செலுத்தியவர்களிடையே 5 மாதங்களுக்குப் பின் உயிரிழப்பும் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2-வது தடுப்பூசி செலுத்தியபின் 3 வது மாதத்திலிருந்து தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் குறையத் தொடங்குகிறது.
2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 2 வாரங்களுக்குப்பின் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், இறப்பு ஏற்படும் வாய்ப்பும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.