கோவிட்ஷீல்ட் தடுப்பூசி செலுத்தி கொண்டவரா நீங்கள்? ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்கள் தடையின்றி ஆஸ்திரேலியா பயணம் செய்யலாம். தனிமைப்படுத்தி கொள்ளத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் நாட்டிற்கு வரும் சர்வேதேச பயணிகளுக்கு தகுந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கும் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக கருதப்படும் என்று சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவில் கல்வி படிப்பை மேற்கொள்ள வரும் சர்வதேச மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க தடையை நீக்கும் என்றும் மோரிசன் கூறியுள்ளார்.
நாட்டில் மேலும் ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா மற்றும் ஜான்சன் நிறுவனத்தின் ஆகிய நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.