கொரோனா தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் உருவான பிரச்சினைக்கு தீர்வு: கனேடிய அறிவியலாளர்கள் முக்கிய தகவல்
கொரோனா தடுப்பூசிகளால் இரத்தக்கட்டிகள் உருவான பிரச்சினைக்கு கனேடிய அறிவியலாளர்கள் தீர்வு கண்டுபிடித்துள்ளார்கள். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கு இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை உருவானதால் உலகம் முழுவதும் சர்ச்சை உருவானது.
தற்போது, கனடாவின் McMaster பல்கலைக்கழக அறிவியலாளர்கள் இந்த இரத்தக்கட்டிகள் பிரச்சினைக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளார்கள். அவர்கள், இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளுடன், immunoglobulin என்று அழைக்கப்படும் ஆன்டிபாடிகளை அதிக அளவில் உடலிலுள்ள இரத்தக்குழாய்கள் வழியாக உடலுக்குள் செலுத்தும்போது, இந்த இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை தீர்வதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த முறையில் மூன்று கனேடியர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோது, அது வெற்றிகரமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
63வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பேர், அவர்களில் ஒருவர் பெண், அவர்களில் இருவருக்கு கால்களிலும், ஒருவருக்கு மூளையிலும் இரத்தக்கட்டிகள் உருவாகியிருந்தன. அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது, இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளுடன், immunoglobulin என்று அழைக்கப்படும் ஆன்டிபாடிகளை அதிக அளவில் உடலிலுள்ள இரத்தக்குழாய்கள் வழியாக அவர்களுக்கு கொடுக்கும்போது இரத்தக்கட்டிகள் உருவாகுதல் நின்றுபோனது தெரியவந்துள்ளது.
ஆகவே, இந்த சிகிச்சையால் கொரோனா தடுப்பூசிகளால் இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது.