திருமணத்துக்கு கொஞ்சம் நாட்களே இருக்கும் நிலையில் ஆண்களைத் தேடிச் சென்று கட்டியணைக்கும் இளம்பெண்: கூறும் வித்தியாசமான காரணம்
தயவு செய்து என்னைத் தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள், எனக்கு உங்கள் மீது ஃபீலிங்ஸ் எல்லாம் இல்லை. ஆனால், உங்களை ஒரே ஒரு முறை கட்டியணைத்துக்கொள்கிறேன் என்று கூறியபடி, உயர் தர இரவு விடுதி ஒன்றில் ஆண்களைக் கட்டியணைத்துக்கொண்ட இளம்பெண் ஒருவரை வித்தியாசமாக பார்த்தார்கள் பலரும்!
அத்துடன், மெல்போர்னைச் சேர்ந்த அந்த பெண் பலருடன் மதுபானங்களையும் பகிர்ந்துகொண்டார்.
தனக்கு பிப்ரவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக வேறு அவர் கூற, இதென்னடா வேடிக்கை என மக்கள் அவரை ஒரு மாதிரியாகப் பார்க்க, தனது செய்கைக்கு விளக்கமளித்துள்ளார் அந்த பெண்.
அதாவது, அவுஸ்திரேலியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 500,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டி விட்டது.
ஆக, திருமண நேரத்தில் தனக்கு கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்ட அந்த பெண், இப்படி தானே மற்றவர்களைக் கட்டியணைத்துக்கொள்வதாலும், அவர்களுடன் பானங்களைப் பகிர்ந்துகொள்வதாலும் தனக்கு இப்போதே கொரோனா வந்துவிட்டால், திருமணத்துக்கு முன் கொரோனாவிலிருந்து விடுபட்டுவிடலாம்.
சரியாக, திருமண நேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தப்பிவிடலாம் என்று எண்ணியே இப்படி செய்வதாக விளக்கமளித்துள்ளார்.
ஆனால், விடயம் என்னவென்றால், வேகமாக பரவிவரும் Omicron வகை கொரோனாவைத் தவிர்ப்பதற்காக, கடந்த புதன்கிழமையிலிருந்து இரவு விடுதிகளில் நடனமாட தடை விதிக்கப்பட்டுவிட்டது.
ஆக, அந்த இளம்பெண்ணின் ஆசை நிறைவேறியதா என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட இந்த காட்சிகளைக் கண்ட இளம்பெண்கள் பலர், அட, இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், இப்படி செய்வது நல்லதல்ல, கொரோனா தொற்றினால் அது மிதமாகத்தான் இருக்கும் என்று யாரும் உறுதியளிக்க முடியாது என்று எச்சரித்துள்ள மருத்துவ நிபுணர்கள், இப்படி விபரீதமான செய்கைகளில் ஈடுபடுவதற்கு பதிலாக, கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாமே என்கிறார்கள்!