சீனா அல்ல... கோவிட் உருவான இடம் இதுதான்: ட்ரம்பின் முன்னாள் அதிகாரி வெளிப்படை
அமெரிக்காவின் ரகசிய உயிரியல் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கோவிட் வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக டொனால்டு ட்ரம்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
வூஹான் ஆய்வகத்தில்
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான CDC-ன் முன்னாள் இயக்குநர் Robert Redfield என்பவரே இந்த புதிய குண்டை வீசியுள்ளார். டொனால்டு ட்ரம்பின் ஆட்சி காலத்தில் CDC இயக்குநராக செயல்பட்ட இவர், சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற கருத்தையும் ஆதரித்தவர்.
தற்போது வட கரோலினா ஆய்வகத்தில் கோவிட் வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரியல் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகவே கோவிட் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மூளையாக செயல்பட்டவர்
மட்டுமின்றி, இப்படியான ஒரு பேராபத்தை சீனா உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டுள்ளார். கோவிட் வைரஸ் உருவாக்குவதில் அமெரிக்காவின் பங்கினை புறந்தள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வட கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரால்ப் பாரிக் என்பவரே இதன் பின்னணியில் செயல்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தம்மால் நிரூபிக்க முடியாது என்றாலும், கோவிட் வைரஸ் உருவாக்கத்திற்கு மூளையாக செயல்பட்டவர் டாக்டர் ரால்ப் பாரிக் என்பவராக இருக்கலாம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |