2022ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்: BCCI அதிகாரி தகவல்.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என BCCI அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக IPL போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டு தொடக்கத்திலும் இந்தியாவில் ஓமிகிரேன் பரவல் உச்சத்தை தொட்டதால், இந்த ஆண்டும் IPL போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படும் என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்த ஓமிகிரேன் பரவல் குறையத்தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தடைகளை நீக்கி, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து முடிவுசெய்வதற்கான ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இதில் BCCI அதிகாரிகள் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அணியின் உரிமையாளர்கள் போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம் என தெரிவித்தாகவும், மேலும் வீரர்களின் பயணங்களை குறைக்கும் விதமாக போட்டிகளை Maharashtraவில் மட்டும் நடத்தலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இறுதி முடிவை BCCI அறிவிக்கும் எனவும் அதற்கு அனைத்து அணிகளும் ஒத்துழைப்பு தரும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு Lucknow மற்றும் Ahmedabad என்ற புதிய அணிகள் இணைக்கப்பட்டு, அணிகளுக்கான வீரர்களின் ஏலம் இந்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.