சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள்தானாம்: கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி
சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, முதல் கொரோனா அலைகளை ஒப்பிடும்போது தற்போது குறைவாக உள்ளது.
ஆனால், அது மூன்றாவது அலையின்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வேகமாக நெருங்கிவருகிறது.
தற்போதைய கொரோனா அலையின்போது இரண்டு குறிப்பிட்ட விடயங்களை கவனிக்க முடிகிறது. ஒன்று, குறைந்த வயதுள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு, தடுப்பூசி பெறாதவர்கள் அதிகம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
முதல் இரண்டு அலைகளின்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் 70 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும். இப்போதோ 30 முதல் 69 வயதுவரையுள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அத்துடன், தற்போது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும் அதிக அளவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
சொல்லப்போனால், மருத்துவமனைகளில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்படுவோரில் பத்தில் ஒன்பது பேர் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள்தான் என்பதால் தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க ஆவன செய்வது நலம் பயக்கும் என கருதப்படுகிறது.