கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி! ஆனால்.. பிரித்தானிய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
இங்கிலாந்துக்கு வருகை தரும் பயணிகளுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என்று முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக சுகாதாரத்துறை அமைப்பானது ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா போன்ற தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா, இந்தியா, துருக்கி, தாய்லாந்து போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாகவே கருதப்படுவர்.
குறிப்பாக இந்தியர்கள் கோவிஷீல்டின் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இங்கிலாந்துக்கு வருகை தந்த பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை இருந்தது. இது ஒரு இனவெறி செயல் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதனால் திருத்தப்பட்ட பயண ஆலோசனை பட்டியலை பிரித்தானியா இன்று வெளியிட்டுள்ளது. அதில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.
COVID19 | In its revised travel advisory, the UK government says Covishield qualifies as an approved vaccine pic.twitter.com/B5R52cDu6v
— ANI (@ANI) September 22, 2021
அது மட்டும் இல்லாமல் பிரித்தானியா வருகை தரும் பயணிகளுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் பயண விதிகளின்படி கோவிஷீல்ட் சேர்க்கப்பட்டிருந்தாலும் தடுப்பூசி சான்றிதழில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல் காரணமாக இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இங்கிலாந்தில் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.