பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால் சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு
சுவிஸ் மாகாணமொன்றில், மலைகளில் பசுக்களுக்கு மேய்ச்சலுக்குப் புல் இல்லாததால், முன்கூட்டியே அவற்றை கீழே கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் விவசாயிகள்.
சுவிஸ் விவசாயிகள் எடுத்துள்ள முடிவு
சுவிட்சர்லாந்தில், விவசாயிகள் தங்கள் பசுக்களை ஆல்ப்ஸ் மலையில் மேய்ப்பது வழக்கம்.

அப்படி ஆல்ப்ஸ் மலையில் மேயும் பசுக்கள் பலதரப்பட்ட தாவரங்களை உட்கொள்வதால், அவை தரும் பாலுக்கும், அதிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்ப்ஸ் பாலாடைக்கட்டிக்கும் அதிக மதிப்பு உள்ளது.
ஆகவே, மலைகளில் மேய்க்கப்படும் பசுக்களுக்கு அரசு நிதி உதவியும் செய்கிறது.
இப்படி மலையில் மேயும் பசுக்களை, பொதுவாக செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில்தான் கீழே இறக்கிக் கொண்டுவருவார்கள் விவசாயிகள்.
ஆனால், ஜூன் மாதம் கல்மழை பெய்ததால் புல்வெளிகள் பாதிக்கப்பட்டதுடன், வறட்சி காரணமாக மீண்டும் புல் வளரவும் இல்லை.

ஆகவே, Fribourg மாகாண விவசாயிகள் புல் இல்லாததால் இப்போதே தங்கள் பசுக்களை மலையிலிருந்து இறக்கி கீழே கொண்டுவரத் துவங்கிவிட்டார்கள்.
இதனால் விவசாயிகளுக்கு இரண்டு இழப்புகள்: ஒன்று, மலையில் மேயாமல் பண்ணையில் மாட்டுத்தீவனம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் பாலுக்கு குறைவான விலையே கிடைக்கும். இரண்டு, அரசு வழங்கும் நிதி உதவி கிடைக்காது.
ஆக, சில விவசாயிகள் தங்கள் பசுக்களில் சிலவற்றை விற்கத் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதனால் பசு ஒன்றிற்கு சுமார் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |