மழைக்கு இதமான சுட சுட கிராமத்து ஸ்டைல் நண்டு குழம்பு: இப்படி செஞ்சி அசத்துங்க
மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளி போன்றவற்றை நிரந்தரமாக நீங்க இந்த நண்டு குழம்பை சாப்பிடலாம்.
உடல் எடையை குறைக்க நண்டு உணவை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் A கண்பார்வைக்கு பெரும் நன்மை தருகிறது.
சூடான சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் சாப்பிட அருமையாக இருக்கும் நண்டு குழம்பை கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நண்டு- 1/2 kg
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 1 1/2 கப்
- பச்சைமிளகாய்- 2
- கருவேப்பிலை- 1 கொத்து
-
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தக்காளி- 2
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- தேங்காய்- 1 கப்
- மிளகு 1 1/2 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- சோம்பு-1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லித்தூள்- 1 ஸ்பூன்
- புளி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி வந்த பின்பு அதில் தேவையான அளவு மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு மிக்ஸியில் தேங்காய், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் புளி கரைத்த தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து வரும்பொழுது அதில் கழுவி சுத்தம் செய்துவைத்துள்ள நண்டை சேர்த்து 15 நிமிடம் மூடிபோட்டு கொதிக்கவிடவும்.
நண்டு நன்கு வெந்து குழம்பு பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்து பரிமாறினாள் சுவையான கிராமத்து ஸ்டைல் நண்டு குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |