100 கிராம் நண்டு இறைச்சி சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்! சுவையோ சுவை
கடல் உணவுகளில் பலருக்கும் பிடித்த ஒரு உணவாக நண்டு உள்ளது. நண்டில் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.
குறிப்பாக கண் பார்வை, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு பெருமளவில் உள்ளது.
100கிராம் நண்டு இறைச்சியில் 59மிகி கால்சியம், 1.5கிராம் கொழுப்பு , 19 கிராம் புரதம், 29IU வைட்டமின் ஏ, 7.6 மிகி வைட்டமின் சி, 9.78 மைகி வைட்டமின் பி 12 ஆகியவை உள்ளன.
100 கிராம் நண்டு இறைச்சியில் 1.5 கிராம் அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. மீதமுள்ள கலோரி அளவு புரதத்தில் இருந்து கிடைக்கிறது. ஆகவே உடல் பருமன் உள்ளவர்களின் கடல் உணவு தேர்வில் நண்டு சிறந்த தேர்வாக உள்ளது.
நண்டு இறைச்சி வைட்டமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் உங்கள் கண்பார்வை அதிகரிக்கிறது.
உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் ஆதாரமாக நண்டு இறைச்சி விளங்குகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிப்பதால் மாரடைப்பு மற்றும் வாதம் உண்டாகும் அபாயம் ஏற்படுகிறது. இதய நோயாளிகள் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் அளவில் கவனமாக இருந்து இவை குறைவாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்வது அவசியம். இத்தகைய இதய நோயாளிகளுக்கு நண்டு இறைச்சி நல்ல ஒரு உணவாக அறியப்படுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், நுண்கிருமிகள் உடலைத் தாக்கி நோய்கள் உண்டாக வழி வகுக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த நண்டை உட்கொள்ளலாம்.
நண்டில் குரோமியம் அதிகம் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீரான நிலையில் பராமரிக்கவும் சிறந்த முறையில் உதவுகிறது.