நாவூறும் சுவையில் நண்டு ஆம்லெட்.., எப்படி செய்வது?
நண்டு சாப்பிடுவது உயர் தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B12, மற்றும் துத்தநாகம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.
மேலும், இது எலும்புகளின் வலிமைக்கும், மூளை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான நண்டு ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நண்டு- 1
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- முட்டை- 3
- பச்சைமிளகாய்- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் நண்டை வேகவைத்து அதன் கறியை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நண்டு கறி சேர்த்து நன்கு வதக்கி கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
பின் ஒரு கிண்ணத்தில் முட்டை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்துகொள்ளவும்.

அடுத்து இதில் உப்பு மற்றும் வதக்கிய மசாலா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து கலந்து வைத்த கலவையை ஊற்றி அதன் மேல் மிளகு தூள் சேர்க்கவும்.
இறுதியாக இதனை சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான நண்டு ஆம்லெட் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |