பயிற்சி மையம் செல்லாமலேயே UPSC தேர்வில் வெற்றி.., யார் இந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி?
பயிற்சி மையத்துக்கு செல்லாமலே 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்ணை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
இந்திய மாநிலமான பஞ்சாப், மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). இவர் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் உடையவர். இவர் CBSE வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
இதன்பின்னர் டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போது படித்துக் கொண்டிருக்கும் போதே குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தார்.
அதுவும் குறிப்பாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் தனது முயற்சியை ஆரம்பித்தார். அந்த நேரத்தில் தான் இவரது தந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையைப் பராமரித்துக் கொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்தார்.
பின்னர், தேர்வு எழுதிய முதல் முயற்சியில் தோல்வியை தழுவினார். அடுத்ததாக 2019 -ம் ஆண்டு இரண்டாவது தேர்வில் வெற்றி பெற்றார்.
தன்னுடைய 22 வயதிலேயே தேசிய அளவில் 88-வது இடத்தை பிடித்து இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் இடம்பிடித்தார். தன்னுடைய பயிற்சி காலத்தின் போதே உடல் நலிவுற்ற தனது தாய் தந்தையை இழந்தார்.
தற்போது, இமாச்சல பிரதேசம் பங்கி பகுதியில் பிராந்திய ஆணையராக பணிபுரிந்துவருகிறார்.
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ரித்திகா ஜிண்டல் கூறுகையில், "எனது தந்தை புற்றுநோயை எதிர்த்து நடத்திய போராட்டத்தை நான் தேர்வுக்கு தயாராகும் போது பார்க்க நேர்ந்தது.
அதுதான் என்னை வலிமையுடன் கடின உழைப்பை செலுத்தித் தேர்வுக்குத் தயாராக உந்தித்தள்ளியது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |