உயிரை காத்த நண்பரை பிரிய மறுத்த நாரை!
உத்தரப்பிரதேசத்தில் தன் உயிரை காப்பாற்றிய நண்பனை காண வந்த நாரையின் நெகிழ்ச்சியான காணொளி வைரலாகி வருகிறது.
வெகுநாள் கழிய தனது நண்பரை கண்ட நாரை !
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நண்பரை கண்ட நாரை மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டு பார்ப்போர் கண்களில் கண்ணீர் மல்க செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அமெதி மாவட்டத்தில் வசிக்கும் மொஹம்மட் அரிப் எனும் குறித்த நபர், தனது தோட்டத்திற்கு சென்றபோது காலில் கடும் காயத்தோடு இந்த நாரை கிடந்ததை கண்டுள்ளார்.
आज फिर एक बार फिर बेजुबान सारस अपने जीवन दाता मित्र आरिफ को देख तड़प उठा चहक उठा लेकिन दोनों मजबूर थे एक दूसरे को छु न सके pic.twitter.com/rzhJgZxpSJ
— कैलाश नाथ यादव (@kailashnathsp) April 11, 2023
வன விலங்கு அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்ட நாரை!
அதற்கு இவர் மருந்து பூசி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதனை நினைவில் வைத்திருந்த நாரை நன்றி மறவாது அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பின்னாலே வந்து அதன் அன்பினை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் வைரலாகும் நிலையில், நாரையானது இயற்கையான சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக வன விலங்கு அதிகாரிகள் அதனை கொண்டு செல்ல வேண்டும் என குறித்த நபரிடம் இருந்து எடுத்து சென்றனர்.
இதனால் நண்பனை பிரிந்த நாரை சரியாக உண்ணாமல் இருந்துள்ளது. நாரையை காண குறித்த நபர் வந்ததையடுத்து மகிழ்ச்சி பொங்கி ஆட்டம் போட்டுள்ளது நாரை.