சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து: சிகிச்சைக்கு பணம் கேட்டதால் இத்தாலி பிரதமர் கோபம்
சுவிஸ் மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 41 பேர் பலியான விவகாரம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த தீவிபத்தில் காயமடைந்த இத்தாலி நாட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்து

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில், புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 41 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.
அந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் இத்தாலி நாட்டவர்களான ஆறு பதின்மவயதினரும் அடங்குவர்.
எரிச்சலில் மெலோனி
Reuters
இந்நிலையில், அந்த தீவிபத்தில் காயமடைந்த இத்தாலி நாட்டவர்கள் நான்கு பேருக்கு சுவிட்சர்லாந்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு அவர்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவமனை பில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அது குறித்து பேசிய சுவிட்சர்லாந்துக்கான இத்தாலி நாட்டின் தூதரான ஜியான் லொரென்ஸோ கொர்னாடோ (Gian Lorenzo Cornado), சுவிஸ் மதுபான விடுதி தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்திலுள்ள சீயோன் மருத்துவமனையில் ஒரே ஒரு நாள் சிகிச்சையளிக்கப்பட்டதற்கு 100,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் அதிகமான தொகை ஒன்றை சுவிஸ் அரசு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி குறித்து அறிந்த இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி, எரிச்சலடைந்துள்ளார்.
Apprendo da notizie di stampa che le autorità svizzere hanno intenzione di chiedere all’Italia il pagamento delle esose spese mediche che l’ospedale di Sion avrebbe sostenuto per i ricoveri, anche di poche ore, di alcuni ragazzi rimasti feriti nell’incendio di Crans-Montana.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) April 24, 2026
Se…
சுவிட்சர்லாந்தின் இந்த வெட்கக்கேடான கோரிக்கை முறைப்படி விடுக்கப்பட்டிருந்தால் அதை இத்தாலி நிராகரிக்கும் என்றும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், சுவிஸ் அதிகாரிகளின் பொறுப்புணர்வு மீது தனக்கு நமபிக்கை இருப்பதாகவும், அவர்கள் இந்த செய்தி ஆதாரமற்றது என சுவிஸ் அதிகாரிகள் நிரூபிப்பார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |