லண்டனில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்... ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர்
தெற்கு லண்டனில் பொலிஸ் வாகனத்துடன் பேருந்து ஒன்று மோதிய விபத்தில் 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
9 பேர்கள் காயங்களுடன்
குறித்த சம்பவமானது ஓவல் சுரங்க ரயில் நிலையம் அருகாமையில் நடந்துள்ளது. பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
@getty
சில பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பொலிஸ் வாகனத்தில் இருந்து ஒருவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.
@getty
விபத்துக்கான காரணம்
ஆனால் எவருக்கும் உயிருப்பு ஆபத்தான வகையில் காயம் ஏற்படவில்லை என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், விசாரணையும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@getty
விபத்தினை அடுத்து தடம் எண் 36, 155, 185, 333 மற்றும் 436 ஆகிய பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |