10 மீற்றர் பள்ளத்தில் தெரிந்த வெளிச்சம்: சுவிஸ் நாட்டவருக்கு கைகொடுத்த அதிர்ஷ்டம்
சுவிஸ் மாகாணமொன்றில், வழிப்போக்கர் ஒருவர் 10 மீற்றர் பள்ளத்தில் ஏதோ வாகனத்தின் வெளிச்சம் தெரிவதைக் கண்டு என்னவென்று பார்க்கச் சென்றார்.
கைகொடுத்த அதிர்ஷ்டம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், Sternenberg என்னுமிடத்தில், காட்டுக்குள், 10 மீற்றர் பள்ளத்தில் வாகனம் ஒன்றின் விளக்கு வெளிச்சம் தெரிவதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், அது என்ன வெளிச்சம் என்று பார்க்கச் செல்ல, கார் ஒன்று பள்ளத்தில் விழுந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக காரிலிருந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை செய்த அவர், அவசர உதவியையும் அழைத்துள்ளார்.
CHEK News
காட்டுக்குள், விபத்துக்குள்ளாகி பள்ளத்துக்குள் விழுந்து கிடந்த அந்த 36 வயது நபரை அந்த வழிப்போக்கர் கண்டது அதிர்ஷ்டம்தான். அவர் உடனடியாக அந்த காரிலிருந்தவருக்கு முதலுதவியும் செய்து, அவசர உதவியையும் அழைத்ததால், அவர் உயிர் தப்பியுள்ளார்.
எப்படி அவரது கார் அந்த பள்ளத்தில் விழுந்தது என்பது தெரியவில்லை. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |