84 ஆண்டுகால சாதனையை முறியடித்த கூட்டணி! முதல் சர்வதேச சதம் விளாசிய வீரர்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் 84 ஆண்டுகால சாதனையை முறியடித்தனர்.
அதிரடி கூட்டணி
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி துடுப்பாடி வருகிறது.
தொடக்க வீரர்கள் ஜக் கிராவ்லே, பென் டக்கெட் இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். டக்கெட்டுக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் சதம் ஆகும்.
இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 214 பந்துகளில் 233 ஓட்டங்கள் குவித்தது.
@Matthew Lewis/Getty Images
சாதனைகள்
இதன்மூலம் 84 ஆண்டுகால சாதனையை கிராவ்லே-டக்கெட் ஆகியோர் முறியடித்தனர். அதாவது இந்த கூட்டணி முதல் செசனில் 174 ஓட்டங்கள் எடுத்தது.
கடந்த 1938ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் 169 ஓட்டங்கள் எடுத்ததே, முதல் செசனில் ஒரு கூட்டணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
மேலும் கிராவ்லே-டக்கெட் கூட்டணி சில சாதனைகளை இந்த டெஸ்ட் போட்டியில் படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் 100 ஓட்டங்களை 83 பந்துகளில் எட்டியது. முதல் செசனில் இங்கிலாந்து அணி 6.44 என்ற அதிகபட்ச ரன்ரேட்டை வைத்திருந்தது சாதனையாகும்.
கிராவ்லே 86 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் அதிவேகமாக சதம் அடித்த தொடக்க இங்கிலாந்து வீரர் மற்றும் சர்வதேச அளவில் 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
@AFP
அதிரடியில் மிரட்டிய கிராவ்லே 111 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்களும், டக்கெட் 110 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்களும் எடுத்தனர்.
Back in the side with a maiden Test century!! ?
— England Cricket (@englandcricket) December 1, 2022
Brilliant, @BenDuckett1 ?
?? #PAKvENG ??????? pic.twitter.com/8shI1wL9SP