அன்பிற்குரியவர்களின் உடலை இனி புதைக்கவோ எரிக்கவோ வேண்டாம்: பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம்
பிரித்தானியாவின் மிகப்பெரிய இறுதிச்சடங்கு மையம் ஒன்று, இந்த ஆண்டின் இறுதியில், இறந்தவர்களின் உடல்களை எரிப்பது அல்லது புதைப்பதற்கு மாற்றாக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
நீர் தகனம்
Co-op Funeralcare என்னும் அந்த நிறுவனம், இறந்தவர்களின் உடல்களை எரிப்பது அல்லது புதைப்பதற்கு மாற்றாக, நீர் தகனம் என்னும் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது.
நீர் தகனம் என்பது, இறந்த உடலுடன், சுடுதண்ணீர் மற்றும் காரம் (alkali) சேர்த்து, உடலை நான்கு மணி நேரத்தில் சாம்பலாகவும், திரவமாகவும் மாற்றும் முறையாகும். இறந்தவர்களின் உறவினர்களுக்கு, இறந்தவரின் அஸ்தி கொடுக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த தகன முறை
இந்த புதிய நீர் தகன முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும். உடல்களை எரிப்பதால், பெருமளவில் கார்பன்டை ஆக்சைடும், நச்சு வாயுக்களும் வெளியாகும். புதைத்தாலோ. நிலத்தடி நீர் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், இந்த நீர் தகன முறையைப் பின்பற்றுவதில் மத ரீதியாக ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா, சட்டத்தில் ஏதாவது இடையூறு உள்ளதா என்பது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
2021இல் மரணமடைந்த, சமூக ஆர்வலரும், ஆர்ச் பிஷப்புமான Desmond Tutu என்பவர், தனது உடலை நீர் தகன முறையில் தகனம் செய்ய ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |