சுடுகாட்டில் நூற்றுக்கணக்கான மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டதால் குழம்பிய கிராம மக்கள்! திறந்த போது ட்விஸ்ட்
சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக சாப்பிடும் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோப்புக்கொல்லை கிராமம். இங்குள்ள சுடுகாட்டில் நூற்றுக்கணக்கான மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
இதனால் குழப்பமும், சந்தேகமும் அடைந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து அங்கு வந்த பொலிசார் 300க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருப்பதை கண்டனர்.
அதனை சோதித்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதில் சாப்பிடும் ரேஷன் அரிசி இருந்தது.
அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பொலிசார் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் ரேஷன் அரிசி குறித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.