காஸா தொடர்பில் அந்த ஒற்றை வாசகம்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு எச்சரிக்கை
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களத்தில் செய்தியை பரப்பிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா எச்சரிக்கப்பட்டுள்ளார்.
பாலாஸ்தீன மக்களுக்கான
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியின் போதே உஸ்மான் கவாஜா பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
@getty
சம்பவத்தின் போது உஸ்மான் கவாஜா அணிந்திருந்த காலணியில் அனைத்து உயிர்களும் சமமே, மற்றும் சுதந்திரம் என்பது மனித உரிமை உள்ளிட்ட வாசகங்களை திட்டமிட்டே பொறித்திருந்தார்.
இதனையடுத்து தனிப்பட்ட பதிவுகளை தடைசெய்யும் சர்வதேச விதிகளை கவாஜா கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆணையம் கூறியுள்ளது.
விவாதமான காலணி
இந்த விவகாரம் தொடர்பில் அணித்தலைவர் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் விளையாட்டு அமைச்சர் ஆகியோர் கவாஜாவை ஆதரித்துள்ளனர்.
Credit: thewest.com.au
ஆனால் தொடர்புடைய காலணியை கவாஜா அதன் பின்னர் அணிந்துகொள்ளவில்லை. இந்த வார தொடக்கத்தில் பெர்த்தில் நடந்த பயிற்சியின் போது தற்போது விவாதமான அந்த காலணிகளுடன் விளையாடியுள்ளார், மேலும் காஸா பொதுமக்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் முன்பும் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |