பிரித்தானியாவில் கிரிக்கெட் போட்டியின் இடையே இளம் ஜோடி செய்த செயல்: அதிர்ந்த அரங்கம்
பிரித்தானியாவில் மான்செஸ்டரில் நடைபெறும் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கிடையிலான T20 இண்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
அந்த கிரிக்கெட் போட்டிக்கு, கிரிக்கெட்டைக் காதலிக்கும் ஒரு ஜோடி வந்திருந்தது. ஆட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென கமெரா பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த அந்த ஜோடியை போகஸ் செய்கிறது.
அதில், அந்த ஆண் மோதிரம் ஒன்றை எடுத்து அந்த பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த, கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் அவர்களை காட்டியது Sky Sports தொலைக்காட்சி சேனல். அத்துடன், 'decision pending' என்ற வார்த்தைகள் திரையில் தோன்ற, வர்ணனையாளர் கிரிக்கெட்டை விட்டுவிட்டு அந்த காதல் ஜோடி மீது கவனத்தை செலுத்த, அந்த பெண் அந்த மோதிரத்தை பெற்றுக்கொண்டு காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, திரையிலிருந்த வார்த்தைகள் 'she said yes!' என்று மாற, அரங்கமே அதிர்கிறது.
தன்னிடம் தன் காதலர் காதலை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லையோ என்னவோ, அந்த பெண் நெகிழ, அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவர் அதைத் துடைப்பதைக் கவனிக்கும் வர்ணனையாளரும் உணர்ச்சி வசப்படுகிறார். அதற்குள் சில ரசிகர்கள் வந்து அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காதல் ஜோடியும் சரி, இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பும் சரி, இந்த காதலை காலாகாலத்துக்கும் மறக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
Decision Pending... ⏳
— England Cricket (@englandcricket) July 21, 2021
She said YES! 💍
Congrats Phil and Jill! ❤️ pic.twitter.com/SHj0iy45Pw