நட்சத்திர வீரர்களான ரஹானே, புஜாராவுக்கு வந்த சோதனை! BCCI எடுத்த முடிவு..
கடந்த இரண்டு ஆடுகளாக எதிர்பார்த்த அளவிற்கு பெர்பார்மன்ஸ் செய்யாத நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரஹானே மற்றும் புஜாராவுக்கு இருவரும் மீண்டும் ரஞ்சி கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கே கேப்டனாக இருந்த அஜின்கியா ரஹானே, தற்போது வேறு ஒரு இளம் வீரரின் தலைமையின் கீழ் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஹானே மட்டுமல்ல, இந்திய அணியின் மாற்றோரு நட்சத்திர வீரரான செதேஷ்வர் புஜாராவுக்கும் அதே நிலை தான்.
சமீப காலமாக இருவரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்ற நிலையில், பி.சி.சி.ஐ. இருவரையும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட தேர்வு செய்துள்ளது.
புஜாராவும், ரஹானேவும் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணிக்கு தேவையில்லாத சுமையாக விளங்கியதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்களை மாற்றி இளம் வீரருக்கு வாய்ப்பு தாருங்கள் என பலமுறை கேட்டும், அணி நிர்வாகமும் அப்போதைய கேப்டனும் செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக முக்கிய தென்னாப்பிரிக்க தொடரை இழந்து தனது கேப்டன் பதவியும் கோலி ராஜினாமா செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Photo: AFP/Getty Images
ரஹானே கடைசியாக டிசம்பர் 2020ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் தான் சதம் அடித்துள்ளார். ரஹானே கடந்த 27 இன்னிங்சில் 547 ஓட்டங்களே அடித்துள்ளார். இதில் சராசரியாக அவர் 20 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.
இதில் 3 அரைசதம் மட்டுமே அடங்கும் இந்த கால கட்டத்தில் ரஹானேவின் ஒட்டுமொத்த சராசரி 43-லிருந்து 39-ஆக குறைந்தது. ரஹானே தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக பிரித்வி ஷா தலைமையில் விளையாட உள்ளார்.
அதேபோல், புஜாரா கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. புஜாரவின் சராசரி வெறும் 27 ஓட்டங்களாக தான் உள்ளது. முக்கியமான போட்டிகளில் டக்காகி ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளார்.
இந்த கால கட்டத்தில் புஜாராவின் சராசரி 47-லிருந்து 44-ஆக குறைந்துள்ளது. புஜாரா உனாட்கட் தலைமையில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளார்.
இருப்பினும், ரஞ்சி போட்டியில் விளையாடுவது அவ்வளவு ஏளனமான விடயம் கிடையாது. சீனியர் வீரர்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ரஞ்சியில் விளையாடினால் தான் அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லலாம்.
புஜாரா, ரஹானே ஜோடி இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.