இது எப்படி இருக்கு..! ஃபிட்னஸ் குறித்த கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் ரோஹித்
ஃபிட்னஸ் குறித்து கிண்டலடித்தவர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா தனது மிரட்டலான கேட்ச் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்ததை அடுத்து, மிகுந்த உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தினால் இந்தியா 18.5 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது மிகவும் கண்டிப்புடன் கோபமாக சுற்றி வந்த கேப்டன் ரோகித் சர்மா, இன்று நடைபெற்ற டி20 போட்டியில் முற்றிலும் கூல் கேப்டனாக ரோகித் ரசிகர்களை கவர்ந்தார். அதே போல தன்மீதான ஃபிட்னஸ் விமர்சனங்களுக்கும் இந்த போட்டியலின் பதிலடி கொடுத்துள்ளார் ரோகித்.
Some people can troll Rohit Sharma for his fitness.. But deep down everyone knows , He had never let INDIA down due to this
— Nick?? (@fortyfive09ro) February 16, 2022
Love you @ImRo45 , what a catch ??#RohitSharmapic.twitter.com/quJFnkjXOk
ஆட்டத்தின் 20-வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி பந்தை ஒடியன் ஸ்மித் சிக்ஸருக்கு தூக்கி விளாசினார். ஆனால் அது பெரியளவில் தூரம் செல்லவில்லை. மிட் ஆஃப் திசைக்கு வந்த பந்தை கேட்ச் பிடிக்க லாக் ஆஃப் திசையில் இருந்து ஓடி வந்தார்.
ஆனால் அவருக்கு முன்னதாகவே ரோகித் சர்மா எக்ஸ்ட்ரா கவர் திசையில் இருந்து ஓடிவந்துவிட்டார். அது சூர்யகுமார் வந்து பிடித்திருக்க வேண்டிய சுலபமான கேட்சாகும். ஆனால், பந்திற்கு துளியும் சம்மந்தம் இன்றி வேறு திசையில் இருந்து வந்த ரோகித் சர்மா, ரன்னிங்கிலேயே கேட்ச் பிடித்து கீழே விழுந்து புரண்டார்.
அது ஆட்டத்தின் கடைசி பந்து என்றாலும், கூடுதலாக இன்னொரு 2 ஓட்டங்கள் போயிருக்கும், அதனை கூட சேமிக்க வேண்டும் என நினைத்து சிரமப்பட்டு பிடித்தார் ரோஹித்.
ரோகித் சர்மா குண்டாக இருக்கிறார்., அவருக்கு என்ன ஃபிட்னஸ் இருக்கிறது?, அவரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கக்கூடாது என விமர்சனங்கள் குவிந்தன.
ஆனால், இந்த ஒற்றை அட்டகாசமான கேட்ச் மூலம் ரோகித் சர்மா தன மீதான கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து பலரது வாயை அடைத்துள்ளார்.
And Rohit takes it.
— Yogen (45) (@frontFootPuller) February 16, 2022
As a said earlier, Rohit is top class fielder. Whether in slips or anywhere.#INDvWI #indvswi #RohitSharma #Captain pic.twitter.com/rahCJPZwlx