'நோ பால்' துஷார் தேஷ்பாண்டேவுக்கு அட்வைஸ் செய்த தோனி - வைரலாகும் வீடியோ
துஷார் தேஷ்பாண்டேவுக்கு அட்வைஸ் செய்த கேப்டன் தோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லக்னோவை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களில், சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் முதல் வெற்றியை பதித்தது.
அட்வைஸ் செய்த தோனி
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு கேப்டன் தோனி அட்வைஸ் செய்தார். பல நோ பால்களுக்குப் பிறகு துஷார் தேஷ்பாண்டே மீது தோனி கோபமடைந்தார். அனைத்து csk பந்து வீச்சாளர்களுக்கும் தோனி கடைசி எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இன்றும் 3 ஆண்டுகள் எங்கள் தலைவன் தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
MSD had a conversation with Tushar about noball, he even showed how not to bowl him. Tushar will come good for us, trust THALA ?. pic.twitter.com/6mH50ZIPz0
— ????? (@Vidyadhar_R) April 3, 2023