"அவர் குற்றவாளி அல்ல" கே.எல்.ராகுல் மீதான சர்ச்சைக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பார்ம் மீதான குற்றசாட்டுக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் பிரசாத்தின் குற்றச்சாட்டு
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் கே.எல்.ராகுலின் பார்மை விமர்சித்து அவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு தருவதாக கூறி விமர்சித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகாஷ் சோப்ரா அவரோடு சண்டையிட்டு வருகிறார்.
நடந்து முடிந்த கவாஸ்கர் கோப்பையில் இதுவரை அவர் ஆடிய 3 போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் மோசமான பார்மில் ஆடி வரும் ராகுலுக்கு தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் ஆட இடம் கிடைக்கிறது என விமர்சித்துள்ளார்.
தொடரும் வாக்குவாதம்
கே.எல்.ராகுலை அணியிலிருந்து நீக்கினால் ஐ.பி.எல் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பதவி கிடைக்காது என யாரும் இதை பற்றி கேள்வி கேட்பதில்லை என வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். இதற்கு கோபமான முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எனக்கு ஐ.பி.எல்-ல் எந்த பதவியும் பணமும் தேவையில்லை.
ஒரு தொடர் நடக்கும் போதே அந்த வீரரை இப்படி விமர்சித்தால் அவர் மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார். இதற்கு வெங்கடேஷ் பதில் கொடுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகியுள்ளது.
ஹர்பஜன் சிங் ஆதரவு
இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்த ஹர்பஜன் சிங் தேவையில்லாமல் ஒரு வீரரை விமர்சிக்கத் தேவையில்லை. அணியில் ஒரு வீரர் சிறப்பாக விளையாடுவதும், பார்ம் இழப்பதும் முன்பு காலத்திலிருந்து நடந்து வரும் விஷயம்.கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர். அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு தந்தால் அவரால் சிறப்பாக் செயல்பட முடியும் என ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.