காதலுக்காக டாக்டரை நிருபராக மாற்றிய சச்சின் டெண்டுல்கர்! தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணந்த சுவாரசிய கதை
கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் படைத்துள்ள ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னை விட 6 வயது மூத்தவரான அஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சச்சின் - அஞ்சலியின் காதல் கதை மிக சுவாரசியமானது.
சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் டாக்டர் அஞ்சலி சச்சினின் மிகப் பெரிய ரசிகர்.
அவர்கள் காதல் குறித்து அஞ்சலி நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். சச்சின் அவரது பெற்றோர்களிடம் அஞ்சலியை ஒரு நிருபர் என்றும் நேர்காணலுக்காக வந்துள்ளார் என்று அறிமுகம் செய்து வைத்ததாக கூறி உள்ளார்.
சச்சினும் அஞ்சலியும் மே 24, 1995-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சச்சின் உடனான காதல் குறித்து அவரது மனைவி அஞ்சலி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.
சச்சினை நான் முதன் முறையாக பார்த்த போது அவருக்கு வயது 17. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது எனது தாயை அழைத்து வர விமானநிலையத்திற்கு வந்தேன்.
அப்போது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தோம். அவரை பார்த்த தருணம் நான், சச்சினை திருமணம் செய்ய விரும்பினேன். பின்னர் நாங்கள் ஒரு பொதுவான நண்பர் மூலம் சந்தித்தோம்.
சச்சின் உடன் நான் பழகிய நாட்களில் மொபைல் போன் ஏதுமில்லை. அவருடன் பேச 48 ஏக்கர் கல்லூரி வளாகத்தை கடந்து தொலைபேசி பூத்துக்கு வர வேண்டும். நீண்ட நேர பேச்சு, அரட்டைகள் இருக்கும். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்க ஒரு பத்திரிகையாளராக நடிக்கும்படி அவர் என்னிடம் கூறினார்.
அவரை நேர்காணல் செய்ய வரும் ஒரு பத்திரிகையாளராக சச்சின் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். இந்த நேரத்தில் சச்சின் சற்று பயந்தார் என கூறியுள்ளார்.