ஆசிய கோப்பையில் படுதோல்வி! தினேஷ் கார்த்திக்கை சேர்க்காததன் பலன்... ஜாம்பவான்கள் கண்டனம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளின் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை சேர்க்காதது தவறான முடிவு என ஜாம்பவான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் முதல் 2 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. 'சூப்பர் 4' சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் மிகவும் அற்புதமாக விளையாடி வரும் நிலையில் அவரை சேர்க்காத பலனை அனுபவித்த இந்தியா ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
ICC
அதே போல இலங்கைக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடைசி ஓவரில் எளிதான ரன் அவுட்டை தவற விட்டது இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் கிரண் மோரோ, தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான முடிவு என தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்சமாம் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அறிவித்த போது அதை கண்டு நான் பீதி அடைந்தேன். ஆனால் இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை பார்க்கும் போது அவர்கள் அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ஆடும் லெவனில் தனது வாய்ப்பை இழந்துள்ளதாகவே பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
BCCI