ரசிகையை வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! தடையை நீக்க அதிரடி முடிவு
நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சானே பாலியல் வழக்கில் சிக்கிய நிலையில் அவர் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.
சந்தீப் லமிச்சானே
நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. இவர் மீது 17 வயது டீன்-ஏஜ் சிறுமி ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் பாலியல் வன்கொடுமை புகார் கூறினார். அதில், நான் சந்தீப்பின் தீவிர ரசிகை.
அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார் காத்மாண்டு ஹொட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
Peter Della Penna/espncricinfo
தடை நீக்கம்
புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. இதன்பின், 2022-ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்தீப், உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டம் பொக்காரா நகரில் நேற்று இரவு நடந்தது. இதில், சந்தீப் லமிச்சானே மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை நீக்குவது என முடிவானது.