நீச்சல் குளத்தில் தவறி விழுந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! அடக்க முடியாமல் சிரித்த சக வீரர்கள்..
பாகிஸ்தான் ஓட்டலில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இணையத்தை வைரலாகிவருகிறது.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக இந்த வார தொடக்கத்தில் அவுஸ்திரேலிய அணி கராச்சியில் உள்ள ஹோட்டலுக்கு வந்தனர். அப்போது அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்டர் அலெக்ஸ் கேரி மறக்க முடியாத ஒரு சம்பத்தை செய்தார்.
அவர் நாதன் லியோனுடன் பேசிக்கொண்டே எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் விழுந்தார். இதைப் பார்த்த சம்பவ இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீச்சல் குளத்தில் விழுந்த கேரியம் தான் விழுந்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார்.
இந்த தருணத்தை அவுஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஏதார்த்தமாக தனது மொபைல் போனில் படம்பிடித்துவிட்டார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வேடிக்கையான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
[KUV1CH ]
குளத்தில் விழுந்த பிறகு, கேரி தனது கைப்பேசியை தனது அணி வீரர்களில் ஒருவரிடம் வீசினார். கடந்த வாரம் ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அசார் அலி மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் முறையே 185 மற்றும் 157 ஓட்டங்களுடன் 476/4 என டிக்ளேர் செய்தனர். பதிலுக்கு, உஸ்மான் கவாஜா (97) மற்றும் மார்னஸ் லாபுசாக்னே (90) ஆகியோர் அந்தந்த சதங்களை தவறவிட்ட நிலையில் அவுஸ்திரேலியா மொத்தம் 459 ஓட்டங்களை எட்டியது. பாகிஸ்தான் தரப்பில் நௌமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்த, 17 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் இமாம் (111 நாட் அவுட்), அப்துல்லா ஷபீக் (134 நாட் அவுட்) ஆட்டமிழக்காமல் சதம் அடிக்க பாகிஸ்தான் 252/0 என்ற நிலையில் இருந்தது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1998-ஆம் ஆண்டு மார்க் டெய்லர் தலைமையில் அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் சனிக்கிழமை தொடங்கும் நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் லாகூரில் மார்ச் 21-25 வரை நடைபெற உள்ளது.