நம்பர் 1 ஆல்-ரவுண்டர் ஆனார் ரவீந்திர ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆல்-ரவுண்டர் ஆனார் ரவீந்திர ஜடேஜா.
மொஹாலியில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தை வென்றதன் மூலம் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு உயர்ந்தார்.
மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டரை இடண்டாம் இடத்துக்கு கீழிறக்கி முதலிடத்தைப் பிடித்தார் ஜடேஜா.
ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பெறுவது இது முதல் முறை அல்ல. இலங்கைக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்ததற்காக ஜடேஜா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது அதிரடியான ஆட்டமே அப்பபோட்டியில் இந்தியா 574/8 டிக்ளேர் செய்ய உதவியது. அவர் அதைத் தொடர்ந்து இலங்கையின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
Credit:ANI
ஜடேஜாவின் 175* என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்.7 அல்லது அதற்கும் குறைவான இடத்தில் துடுப்பாடிய இந்தியரின் அதிகபட்ச ஸ்கோராகும்.
ஹோல்டர் இப்போது இரண்டாவது இடத்திலும், மற்றோரு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கிடையில், சமீபத்தில் தனது 100வது டெஸ்டில் விளையாடிய முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குத் திரும்பினார் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் மொஹாலியில் 96 ஓட்டங்கள் விளாசி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.
Jadeja reaches the summit ?
— ICC (@ICC) March 9, 2022
Kohli, Pant move up ⬆️
Some big movements in the latest update to the @MRFWorldwide ICC Men's Test Player rankings ?
Details ? https://t.co/BjiD5Avxhk pic.twitter.com/U4dfnrmLmE
அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே உலகின் சிறந்த பேட்டராக தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார். மேலும் அவரது 936 ரேட்டிங் அவரை All-time list-ல் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பந்துவீச்சாளர்களுக்கான ஆண்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நீல் வாக்னர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களை மாற்றிக்கொண்டனர்.