டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 3 வீரர்கள் யார் தெரியுமா? அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலுக்கு இடம் இல்லை
ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்களை விட ரசிகர்களுக்கு பிடித்த கிரிக்கெட்டாக டி20 கிரிக்கெட் மாறி வருகிறது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தான் பல அதிரடி ஆட்டங்களை காணமுடியும்.
அதாவது, அடிக்கடி சிக்சர், ஓவருக்கு ஓவர் ட்விஸ்ட் என டி20 கிரிக்கெட் தனித்துவமாக பல அம்சங்களை கொண்டிருப்பதால் தான் இதனை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
சிக்சர் மழை பொழியும் இத்தகைய டி20 கிரிக்கெட்டில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்துள்ள டாப் 3 வீரர்கள் குறித்து காண்போம்.
மார்டின் கப்டில் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணி துவக்க வீரர் மார்டின் கப்டில், மொத்தம் 98 டி20 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 32.29 சராசரி, 136.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2939 ரன்கள் அடித்துள்ளார். இதில் 147 சிக்ஸர்கள், 256 பவுண்டரிகள் அடித்து, சர்வதேச டி20 கிரிகெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா (இந்தியா)
இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா மொத்தம் 103 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் 32.54 சராசரி, 138.96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 133 சிக்ஸர்கள், 252 பவுண்டரிகள் அடித்து, அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் படித்துள்ளார்.
இயான் மோர்கன் (இங்கிலாந்து)
தற்போதுவரை 100 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர் 29.63 சராசரி, 138.46 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2311 ரன்கள் குவித்துள்ளார். இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 116 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
டாப் 3 பட்டியலில் இமாலய சிக்சர்களுக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலுக்கு இடம் இல்லையா என பலருக்கும் கேள்வி எழலாம்.
கிறிஸ் கெயில் 70 இன்னிங்ஸ்களில் 106 சிக்ஸர்கள் அடித்து, 5ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டை விட, டி20 லீக் தொடர்களில் தான் அதிகம் பங்கேற்றிருக்கிறார் என்பது முக்கிய விடயமாகும்.