கண்ணீருடன் மைதானத்திற்குள் நுழைந்த ரோகித் சர்மாவின் ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்!
போட்டியின் நடுவே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த ரோகித் சர்மாவின் ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிப்பு.
இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று (நவம்பர் 6) ஜிம்பாப்வேக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது ஆடுகளத்தை ஆக்கிரமித்ததற்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ரசிகருக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆட்டத்தின்போது, இந்திய சிறுவன் (ரசிகர்) ரோகித்தை சந்திக்க மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் ரோகித் ஷர்மாவிற்கு அருகில் வந்தபோது கண்ணீருடன் காணப்பட்டார்.
பதின்ம வயதினராக இருந்த அந்த சிறுவனை மைதான ஊழியர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தினர், மேலும் அந்த ரசிகருக்கு ஆடுகளத்தை படையெடுத்ததற்காக ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Rohit Sharma fans on the Ground ?#WorldCup #RohitSharma? #INDvsZIM pic.twitter.com/i5yfitrBin
— Malav ? (@Malav273) November 6, 2022
Rohit Sharma fans on the Ground ?#WorldCup #RohitSharma? #INDvsZIM pic.twitter.com/i5yfitrBin
— Malav ? (@Malav273) November 6, 2022
இதற்கிடையில், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா குரூப்-2ல் முதலிடத்தைப் பிடித்தது, நவம்பர் 10-ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.