டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடக்கம்! அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய அணி என்ற பெருமையுடன் களமிறங்கும் இலங்கை
16 நாடுகள் பங்குபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ளது.
இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடக்க போட்டியில் ஓமன் பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஓமானின் அல் அமரத் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இம்முறை டி-20 உலகக் கோப்பையில் துபாய் சர்வதேச மைதானத்தில் நவம்பர் 14 அன்று நடக்கும் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 45 போட்டிகள் உள்ளடங்குகின்றன.
நடப்பு டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சிப் போட்டிகள் அனைத்திலும் வென்றுள்ள இலங்கை நாளை நமீபியாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை தகுதிகாண் போடியில் ஆரம்பிக்கும்.
டி20 உலகக்கோப்பையில் இலங்கை விளையாடிய இறுதிப் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக மூன்றாகும்.
அதிகமுறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணி இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.