ரோஹித் ஷர்மாவுக்கு அறிவுரை கூறிய விராட் கோலியின் பயிற்சியாளர்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு விராட் கோலியின் பயிற்சியாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ் டோணியைப் போல, கூல் கேப்டனாக அறியப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, சமீப காலமாக கோபக்காராக காணப்படுகிறார்.
வீரர்கள் கேட்சை விட்டால் திட்டுவதும் மற்ற வீரர்கள் எதாவது தவறு செய்தால் எரிந்து விழுவதுமாக இருக்கிறார் ரோகித். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது சீனியர் புவனேஸ்வர் குமார் கேட்சை விட்டதற்கு, பந்தை ஓங்கி உதைத்து சர்ச்சையில் சிக்கினார் ரோகித் சர்மா.
இந்த நிலையில், விராட் கோலியின் சின்ன வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா, கேப்டன் ரோகித் சர்மா களத்தில் சக வீரர்களை திட்டுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராஜ்குமார் சர்மா பேசுகையில், ரோகித் சர்மா அமைதியான கேப்டனாக அறியப்பட்டவர். ஆனால் இப்போது கோபக்காரராக இருக்கிறார். சக வீரர்களை மக்கள் முன் திட்டக் கூடாது. களத்தில் திட்டாமல், அவர்களது தவறை அமைதியான முறையில் எடுத்து சொல்ல வேண்டும். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது.
கோலி கேப்டனாக இருக்கும் போது தோனி தான், ஃபில்டிங்கை சரி செய்து நிறுத்துவார். இது போன்று ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.