உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 - சென்னை மைதானம் தேர்வு... - ரசிகர்கள் மகிழ்ச்சி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 தொடரில் சென்னை மைதானத்தில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.
2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து
மெல்போர்னில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
உலகக் கோப்பை 2023 - சென்னை மைதானம் தேர்வு
ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இத்தொடர் நடைபெறுவது தனி சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் மோத உள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை, பெங்களூர், டெல்லி, தர்மசாலா, கவுஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை என 12 மைதானங்களில் இப்போட்டியை நடத்த பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.
இதனால், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற மைதானங்கள் உலககோப்பை போட்டியை நடத்தப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐ 3 மைதானங்களையும் தற்போது தேர்வு செய்திருப்பதாகவும், அதில் சென்னை மைதானத்தில் காலிறுதி போட்டிகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.