சான்ட்னர் சுழலில் சிக்கிய நெதர்லாந்து: 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மூவர் அரைசதம்
நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதிய உலக கோப்பை ஒருநாள் போட்டியில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரர்களான கான்வே 32 ஓட்டங்களிலும், அதிரடியாக விளையாடிய வில் யங் 80 பந்துகளில் 70 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
பின்னர் வந்த ரவீந்திரா 51 ஓட்டங்களும், டெர்ல் மிட்செல் 48 ஓட்டங்களும் விளாசினர். கேப்டன் லாதம் அதிரடியாக 46 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்து அணியின் மொத்த ஓட்டங்களை அதிகரித்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 322 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து வெற்றி
323 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங் (12) ஓட்டங்களும், மேக்ஸ் ஓ டவுட்(18) ஓட்டங்களும் குவித்து அவுட்டாகினர்.
கொலின் அக்கர்மேன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 பந்துகளில் 69 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
ஆனால் மறுமுனையில் வீரர்கள் யாரும் ஜொலிக்க தவறியதால் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
New Zealand consolidate their top position in the #CWC23 points table with another win ?#NZvNED ?: https://t.co/s8xJZL69dc pic.twitter.com/iKumdGRbgR
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 9, 2023
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணியை 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |