கிரிக்கெட் உலகையே மிரள வைத்த கிறிஸ் ஜோர்டன்! சிக்ஸர் போன பந்தை ஒற்றை கையில் பீடித்து அவுட் ஆக்கிய காட்சி
இந்திய அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில், இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் பிடித்த கேட்ச் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டி20 போட்டி அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது,
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் பிடித்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளது.
Wat a brilliant catch by Chris Jordan......Wow......Vera levelllll........Excellent.....#Chrisjordan #INDvENGt20 #Cricket #INDvsENG_2021 pic.twitter.com/iNVdvs3HZD
— Thanigai Velan??❤ BE MBA (@imthanigai23) March 20, 2021
சுழற்பந்து வீச்சாளரான அஷித் ரஷீல் வீசிய பந்தை, இந்திய அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் லெக் திசையை நோக்கி சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.
What a great caught by Chris Jordan.#suryakumaryadav #viratkohli #RohitSharma #INDvENG #paytm #bcci #chrisjordan pic.twitter.com/giTJCKkcbG
— Caught Out (@CaughtOut_in) March 20, 2021
ஆனால், அங்கே பீல்டிங் நின்று கொண்டிருந்த கிறிஸ் ஜோர்டன் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்து, ஒற்றை கையில் பந்தை பிடித்து, அருகில் இருந்த ஜோசன் ராயிடம் வீசிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்றார். அதை ஜோசன் ராய் பிடித்துவிட்டு, ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.