இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்! எதுக்கு இந்த ரூல்ஸ்: கோஹ்லி சூர்யகுமார் ஆதவ் அவுட் குறித்து கேள்வி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில், சூர்யகுமார் யாத்வ் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து கோஹ்லி பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், சூர்யகுமார் யாத்வ்வின் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Poor umpiring. Another umpiring howler in the #INDvsENG series. How on earth a fielder won't know weather he has touched the ropes or not? How won't a fielder won't know he has grasped a clean catch or not? And How can an umpire give a soft signal as OUT with a doubt? Horrible pic.twitter.com/k6bodst4PS
— Chandan Ray (@imchandanRay) March 18, 2021
இந்நிலையில், இது குறித்து கோஹ்லி கூறுகையில், நடுவரகளின் தவறான முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். விதிகளை எளிமையாக்க வேண்டும். இதுமாதிரியான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.
முக்கியமான போட்டிகளில் இதுமாதிரியான தவறான முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் பாதிக்கப்பட்டதை போல, நாளை வேறொரு அணி பாதிக்கப்படும்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தபோது, அவருக்கே அது அவுட்டா இல்லையா என்று தெரியவில்லை.
களநடுவர்கள் சந்தேகம் இருந்ததால், டிவி அம்பயரை நாடினார். ஆனால் சூர்யகுமார் கேட்ச்சில் அப்படி செய்யாமல், சாப்ட் சிக்னலில் அவுட் என்று கொடுத்ததால் தான், அவர் வெளியேற வேண்டியதாயிற்று. இந்தமாதிரியான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறினார்.