”கியூட்” ! பிரபல நடிகை போட்டோவுக்கு வெங்கடேஷ் ஐயர் போட்ட கமெண்ட்டால் ரசிகர்களுக்கு எழுந்த யூகம்
இந்திய அணி இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் - நடிகை ப்ரியா ஜவல்கர் இடையே நடந்த சமூகவலைதள உரையாடல் இருவருக்கும் இடையே காதலா என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
நடப்பு ஐபில் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார். இதுவரை கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 1ல் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான ப்ரியங்கா ஜவல்கர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்திற்கு ”கியூட்” என கமெண்ட் செய்தார் வெங்கடேஷ் ஐயர்.
அதற்கு பதிலளித்த ப்ரியங்கா யார்? நீங்களா? என பதிவிட்டார். இப்படி இருவரும் பொதுவெளியில் அழகாக பேசி கொண்டது ரசிகர்கள் இடையே பல யூகங்களை கிளப்பியுள்ளது. அதன்படி இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதனையடுத்து இது குறித்து ரசிகர்கள் பல கருத்துகளை அந்த பதிவில் எழுதி வருகின்றனர்.