மனைவி தனிமையில் வாடுவதை உணராமல் போதைக்கு அடிமையானேன்! அவள் இறந்த பிறகு... பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கம்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு போதைக்கு அடிமையான ஜாம்பவான் வாசிம் அக்ரம்.
சுயசரிதை நூலில் கூறியுள்ள தகவல்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், கடந்த 2003ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் இவர் 900 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார்.
இந்நிலையில் Sultan: A Memoir என்ற பெயரில் வாசிம் அக்ரமின் சுயசரிதை நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது.அந்த சுயசரிதையில் வாசிக் அக்ரம் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் தற்போது கசிந்துள்ளன. அதில், வர்ணனையாளராக பணியாற்றியபோது கோகைன் பயன்படுத்தத் தொடங்கியதாக கூறியுள்ளார்.
வாசிம் அக்ரம் தனது போதைபழக்கம் குறித்து கூறி இருப்பதாவது: எனது ஓய்வு காலத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல என் வாழ்வில் போதைப்பொருள் பழக்கம் நுழைந்தது. இங்கிலாந்தில் ஒரு பார்ட்டிக்கு சென்றபோது கோகைனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். பிறகு நாளுக்குநாள் அது பயன்படுத்துவது வளர்ந்து கொண்டே போனது.
BCCL
ஒரு இரவில் 10 விருந்து நிகழ்வுகளுக்கு நீங்கள் போகமுடியும். அவ்வாறு சென்றது தான் என்னைப் பாதித்தது
கோகோயின் என்னை ஒழுங்கற்றவராகவும் நேர்மையற்றவராகவும் ஆக்கிவிட்டது. இந்த கடினமான நேரத்தில் தனது முதல் மனைவி ஹுமா தனிமையை அனுபவித்தார்.
அதை நான் உணரவேயில்லை, அடிக்கடி என்னிடம் நான் கராச்சிக்கு செல்கிறேன்; எனது பெற்றோரிடம் வாழ விரும்புகிறேன் என்று கூறுவார். நான் தான் வற்புறுத்தி இருக்க வைத்தேன். அப்போது எனக்கு புரியவில்லை.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படி போதையுடன் நான் செல்வதை கண்டு அவர் எப்படி மனமுடைந்திருப்பார் என்று பின்னர்தான் உணர்ந்தேன். 2009ஆம் ஆண்டு எனது மனைவி என்னை விட்டு பிரிந்த போதுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். அதன் பிறகு இந்த போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டேன்.
thebridalbox
என் வாழ்வில் மறக்க முடியாத இழப்பு எனது மனைவி என்னை விட்டு பிரிந்ததுதான் என தெரிவித்துள்ளார். வாசிம் அக்ரம் முதல் மனைவி ஹுமா 2009ஆம் ஆண்டு அரிய வகை பூஞ்சை தொற்று பரவியதில் திடீரென உயிரிழந்தார்.
இதன்பின்னர் வாசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷனீரியா தாம்சன் என்ற பெண்ணை கடந்த 2013ல் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters