இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா சாதனையை சமன் செய்த பிரபல வீரர்! தொடர்ந்து 4 சதம் விளாசி அசத்தல்
தொடர்ந்து 4 சதங்களை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனையை கர்நாடக வீரர் தேவதூத் படிக்கல் படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 50 ஓவர் போட்டித்தொடரான இதில் இன்று டெல்லியின் பாலம் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், கேரளாவை எதிர்த்து நடப்பு சாம்பியனான கர்நாடகா களமிறங்கியது.
இதில் கர்நாடகாவிற்காக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் தேவதூத் படிக்கல் 119 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் அவர் தொடர்ந்து அடிக்கும் 4வது சதம் இதுவாகும். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை தேவதூத் படிக்கல் படைத்தார்.
உலக அளவில் தேவதூத் படிக்கலையும் சேர்த்து இச்சாதனையை மொத்தம் 3 வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர்.
இலங்கை அணியின் குமார் சங்கக்கரா 2015 உலக கோப்பை தொடரிலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சன் 2015-16 Momentum ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து 4 சதம் எடுத்த மற்ற இரண்டு வீரர்கள் ஆவார்கள்.