IPL விட்டு விலகி ரூ.100 கோடியில் Business நடத்தி வரும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் வேண்டாம் என்று விலகி தற்போது ரூ.100 கோடி மதிப்பில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
யார் அவர்?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சர்வேஷ் சஷி (Sarvesh Shashi) துணிச்சலாக தனது கிரிக்கெட்டை விட்டு விட்டு சர்வா என்னும் ஆரோக்கிய நல நிறுவனத்தை தொடங்கி அதன் மதிப்பு இப்போது ரூ.100 கோடியை எட்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சர்வா நிறுவனத்துக்கு பிரபலங்களான மலாய்க்கா அரோரா, மிரா கபூர், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் ஆதரவைத் தந்தனர்.
இந்த நிறுவனம் சென்னையில் 3 studios -களுடன் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது 32 நகரங்களில் 90 -க்கும் மேற்பட்ட studios -களுடன் செயல்படுகிறது.
தற்போதைய காலத்தில் உள்ள Modern Lifestyle சவால்களை தீர்ப்பதில் கவனத்தை செலுத்தும் இந்த நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகள் வந்து குவிகின்றன.
இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் யோகா கலையின் மீது சர்வேஷு வைத்திருக்கும் அர்ப்பணிப்பு தான். இவருக்கு சஷி குமாரின் வழிகாட்டுதல் காரணமாக யோகா மீது ஆழ்ந்த பற்று ஏற்பட்டுள்ளது.
சர்வேஷ் தொழில் தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட்டில் பிரபலமாக இருந்தார். குறிப்பாக இந்திய பிரிமீயர் லீக்கான IPL தொடரில் விளையாடினார். ஆனாலும், யோகா மீது இருந்த ஆர்வத்தால் கிரிக்கெட்டை விட்டு விட்டு யோகா பயற்சி பெற்று வெற்றியடைந்தார்.
Virtual பாடங்களை வழங்கும் சொந்த application மூலம், ஆரோக்கிய துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக சர்வா நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சர்வேஷின் தலைமையின் கீழ் இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் இருந்து $14.1 மில்லியன் மதிப்புடன் தொடர்கிறது.
முக்கியமாக, ஜான்வி கபூர், ஷ்ரியா சரண், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுக்கு பயிற்சி அளித்து, உடற்பயிற்சி சமூகத்தில் முக்கிய நபராக இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |