திருமணம் செய்து கொண்ட இரு பிரபலமான இங்கிலாந்து பெண்கள்! புகைப்படங்களுடன் சுவாரசிய தகவல்கள்
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீராங்கனைகளான கேத்தரீன் ப்ருண்ட் மற்றும் நாட் ஸ்கிவர் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் ஆண்டுகக்கணக்கில் டேட்டிங் செய்த வந்த நிலையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். 2017ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேத்தரீன் மற்றும் ஸ்கீவர் ஆகிய இருவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டே இருவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக தள்ளி போனது.
கேத்தரீன் - ஸ்கிவர் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் 2018ல் நடந்தது. தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் கேத்தரீன் - ஸ்கிவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.