பிரித்தானியாவில் பெண் சடலங்களுடன் புகைப்படம் எடுத்த பொலிஸாருக்கு நேர்ந்த கதி!
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட இரண்டு பெண்களின் கிரைம் சீன் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிரித்தானியாவில், வடக்கு லண்டனில் உள்ள வெம்ப்லியில் அமைந்துள்ள Fryent Country பூங்காவில், கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் திகதி பிபா ஹென்றி (Bibaa Henry), வயது 46, மற்றும் நிக்கோல் ஸ்மால்மேன் (Nicole Smallman), வயது 27, ஆகிய இரண்டு பெண்கள் புதர்களில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இருவரும் சகோதரிகள் என கூறப்படுகிறது.
Picture: Met Police
லொட்டரியை வெல்வதற்காக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெண்களைக் கொல்வதாக ஒரு பேய்க்கு ரத்தத்தில் சத்தியம் செய்ததகாக கூறப்படும், டான்யால் ஹுசைன் (Danyal Hussein) எனும் 19 வயது இளைஞர், இந்த சகோதரிகளை கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரம் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அன்று இரவு, Deniz Jaffer மற்றும் Jamie Lewis ஆகிய இரண்டு காவலர்கள் (Police Constable) குற்றம் நடந்த இடத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டனர்.
Picture: Reuters
அப்போது, அவர்கள் இருவரும் பூங்காவில் சம்பவ இடத்தைச் சுற்றி அமைக்கட்ட தடுப்புகளை மீறி உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர், Lewis தனது செல்போனில் கொலை செய்யப்பட பெண்களின் சடலங்கள் பின்னால் தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்தப் படத்தை முதலில் Deniz Jaffer-க்கு அனுப்பினார், அவர் அதை சம்பவ இடத்தில் ஒரு பெண் அதிகாரிக்கு அனுப்பினார்.
பின்னர், ஜாஃபர் பூங்காவை விட்டு வெளியேறும்போது அந்த புகைப்படங்களில் ஒன்றை ஒரு ஆண் அதிகாரியிடம் காட்டச் சென்றார், மேலும் மூன்று நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார்.
Picture: Reuters
அந்த படங்களை பகிரும்போது, லூயிஸ் 'இழிவான மற்றும் பாலியல்' ரீதியா தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் 'A Team' என்று அழைக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ்அப் குழுவுடன் குற்றச் சம்பவங்களின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியதைத்த தொடர்ந்து, காலவர்லர்கள் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இருவரும் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி Mark Lucraft QC அதிகாரிகள் காவலில் இருந்து விடுபடுவதற்கான மேல்முறையீட்டை நிராகரித்தார்.
மேலும், இருவரையும் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்தார்.
அவர்களின் 'பயங்கரமான மற்றும் விவரிக்க முடியாத நடத்தை'யை கண்டனம் செய்த நீதிபதி, 'மலிவான சுகம்' அல்லது 'ஒருவித தற்பெருமைகளுக்காக' பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை அவர்கள் புறக்கணித்ததாகக் கூறினார்.Picture: SWNS
