கனடாவில் இந்தியா முன்னெடுக்கும் குற்ற நடவடிக்கைகள்... பின்னணியில் இருக்கும் ஒரு அரசியல்வாதி
கனடாவில் நடந்த அரசியல் தொடர்பான குற்றச்செயல்களுக்கு பின்னணியில் இந்தியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த அரசியல்வாதி இருப்பதாக ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா உறுதி
கனடாவில் நடந்தேறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில், இந்தியாவை கனடா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது.
மேலும், கனடாவில் நடந்தேறிய வன்முறைகளுக்கு பின்னணியில் ஒட்டாவா, ரொறன்ரோ மற்றும் வான்கூவர் பகுதிகளில் செயல்படும் இந்தியாவின் ஆறு தூதரக மற்றும் துணை தூதரக அதிகாரிகள் இருப்பதாக கனடா உறுதி செய்துள்ளது.
ஆனால், கனடாவில் நடந்தேறும் இந்திய அரசியல் தொடர்பான மொத்த வன்முறை சம்பவங்களுக்கும் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் வலக்கரமான, இந்தியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த அரசியல்வாதியான அமித்ஷா இயங்குவதாக கனடா காவல்துறைக்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
திங்களன்று RCMP இந்தியாவின் தீவிரமான குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட அந்த அதிகாரிகள் அறிவுறுத்தியபடி செய்யாவிட்டால் இந்தியாவுக்குத் திரும்ப விசா மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தனிப்பட்ட நபர்களை வேவு பார்த்தல், சீக்கிய அமைப்புகளை கண்காணித்தல், திரட்டப்படும் தரவுகளை உரிய அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் அளித்து வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் மோடி அரசாங்கத்தின் மற்ற எதிரிகள் குறிவைக்கப்பட்டனர். மட்டுமின்றி கனடாவில் நெருப்பு வைத்தல் தொடங்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்புதல் உள்ளிட்ட தாக்குதல்கள் இந்திய தூதர அதிகாரிகளின் அடியாட்களால் முன்னெடுக்கப்படுகிறது.
மொத்தமாக மறுத்த அமித்ஷா
தற்போது இந்திய அரசியல் தொடர்பான வன்முறை சம்பவங்களை RCMP தீவிரமாக விசாரித்து வருவதாகவும், அந்தவகையில் பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தரவுகள் அனைத்தும் இந்தியாவின் உள்விவகார அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக இருப்பதாகவே கூறுகின்றனர். குஜராத்தில் இஸ்லாமிய தம்பதி ஒன்றை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக 2010ல் அமித்ஷா கைதானார்.
அப்போது அவர் குஜராத்தின் உள்விவகார அமைச்சராக செயல்பட்டு வந்தார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்த அமித்ஷா, மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாக இருந்தார்.
2014ல் அந்த அவழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதே ஆண்டு இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்புக்கு வந்தார். 2019ல் இந்தியாவின் உள்விவகார அமைச்சராக அமித்ஷா பொறுப்புக்கு வந்தார்.
தற்போது கனடாவில் நடக்கும் இந்திய அரசியல் தொடர்பான பல்வேறு குற்றச்செயல்களுக்கும் பின்னணியில் அமித்ஷா இயங்குவதாகவே RCMP குற்றஞ்சாட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |