சுவிஸ் அதிகாரிகளின் அலட்சியம்... பரிதாபமாக மரணமடைந்த இலங்கைப் பெண்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

prison court Waaghof verdict
By Arbin Aug 27, 2021 08:50 PM GMT
Report

சுவிஸ் சிறையில் தற்கொலைக்கு முயன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் பரிதாபமாக மரணமடைந்த இலங்கைப் பெண் வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாகோஃப் சிறையில் இலங்கைப் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று, இரண்டாவது நாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு சிறை காவலர்கள் கவனக்குறைவாக கொலை செய்தாக கூறி குற்றவியல் நடவடிக்கையில் சிக்கினர்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பேஸல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் கவனக்குறைவாக கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நால்வரையும் விடுவித்துள்ளது.

நால்வரும் கடமையில் தவறியதாகவே நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. 29 வயதான இலங்கையர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் கண்காணிப்பு கெமராவில் தெரியரவர, இரவுப்பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் உட்பட நால்வர் முன்னெடுத்த துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டார். ஆனால் அந்த நால்வரும் குறித்த இலங்கையருக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உடனடியாக ஏற்பாடு செய்ய தவறியுள்ளனர்.

சுமார் 18 நிமிடங்களுக்கு பின்னரே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி இரண்டாவது நாள் மரணமடைந்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் விடுவித்துள்ள நீதிமன்றம், இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்க கூடாது எனவும், இது அரசு, நீதித்துறை மற்றும் சிறை அமைப்பின் தோல்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US