இனி இந்த குற்றவாளிகள் சிறை செல்லவேண்டாம்... பிரித்தானிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
பிரித்தானியாவில், 12 மாதங்களுக்கு குறைவான சிறைத்தண்டனை பெற்றவர்கள் இனி சிறை செல்லவேண்டாம் என்னும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இனி இந்த குற்றவாளிகள் சிறை செல்லவேண்டாம்...
பிரித்தானிய சிறைகள் நிரம்பி வழிகின்றன. சுமார் 88,225 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காக, மக்களுடைய வரிப்பணம் ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவிடப்படுகிறது.
ஆகவே, சிறைகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக, நீதித்துறைச் செயலரான அலெக்ஸ் சால்க் (Alex Chalk) சில புதிய திட்டங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி, 12 மாதங்களுக்குக் குறைவான சிறைத்தண்டனை பெற்றவர்கள் இனி சிறையில் அடைக்கப்படமாட்டார்கள். அவர்கள், காலில் மின்னணுப்பட்டை அணிவிக்கப்பட்டு, சுவர்களில் பெயிண்டால் கிறுக்கப்பட்டுள்ள வேண்டாத விடயங்களை அகற்றும் மற்றும் சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
உருவாகியுள்ள எதிர்ப்பு
ஆனால், குற்றம் செய்து தண்டனை பெற்றும் அவர்கள் தெருக்களில் சுதந்திரமாக நடமாடுவார்களா? வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என, அரசு தரப்பிலிருந்தே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
அந்தக் கேள்விகளுக்கு விளக்கமளிக்க அமைச்சர் Alex Chalk, வன்புணர்வு மற்றும் பயங்கர பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், இப்படி தெருக்களில் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் முழு தண்டனைக் காலத்தையும் சிறையில்தான் செலவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |