அந்த வகை கார்களையே திருடர்கள் குறிவைக்கிறார்கள்: சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அதிகாரிகள்
திருடர்கள் குறிப்பிட்ட வகை கார்களை குறிவைத்து திருடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பு பிரித்தானிய மக்களை எச்சரித்துள்ளனர்.
பெரும்பாலான வாகனம் Honda Jazz
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 catalytic converter -கள் திருடு போயுள்ளது. மட்டுமின்றி திருடர்கள் குறிவைக்கும் பெரும்பாலான வாகனம் Honda Jazz எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
@getty
லிவர்பூல் பகுதியில் தனியார் வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பட்டப்பகலிலும் பலமுறை கவனத்தை திசைதிருப்பி திருட்டு நடந்துள்ளதாக கூறுகின்றனர்.
திருடர்கள் பழுது பார்ப்பவர்கள் வேடமிட்டு, பட்டப்பகலில் திருட்டு வேலையை நிறைவேற்றலாம். உங்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள catalytic converter-ஐ பாதுகாக்க, Cat locks வாங்கி பயன்படுத்தலாம்.
101 அல்லது 999
இதனால், ஏற்கனவே இழப்பை எதிர்கொண்டுள்ள வாகன சாரதிகள், இந்தமுறை திருட்டில் இருந்து தப்பலாம். கண்காணிப்பு கமெரா அல்லது அழைப்பு மணி கமெரா பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் வாகனத்தை பின்புறம் கமெராவில் பதியும் வகையில் நிறுத்த வேண்டும்.
@getty
உங்கள் வாகனத்தை எவரேனும் நோட்டமிடுவதாக சந்தேகித்தால் 101 அல்லது 999 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக திருட்டு நடந்துவிட்டது என்றால், புகைப்படம், கமெரா காட்சிகள் உட்பட ஆதாரங்களுடன் அதிகாரிகளை நாடினால், நடவடிக்கை முன்னெடுக்க உதவியாக இருக்கும்.